என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரிட்டன் பாராளுமன்றம்
நீங்கள் தேடியது "பிரிட்டன் பாராளுமன்றம்"
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று தோல்வி அடைந்தது. #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
லண்டன்:
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
மேலும், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.
‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறியாக வேண்டும்’ என்று டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.
இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு வித்துள்ளார். #BritishMPs #BritishMPsrejected #TheresaMaydeal #leavingEU #Brexit
பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக எம்பிக்கள் கொண்டு வந்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. #Brexit #BritishParliament
லண்டன்:
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.
“பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை எம்பிக்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக நேற்று 8 மாற்று ஒப்பந்தங்களை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. #Brexit #BritishParliament

பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்வைத்த பிரெக்சிட் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் போன நிலையில் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருக்க 6 லட்சம் மக்கள் கையொப்பமிட்டுள்ளனர். #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
லண்டன்:
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வரும் 29-ந் தேதி முடிவடைகிறது.
ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்து விட்டனர்.
அதேபோல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்சிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.
அதனை தொடர்ந்து, கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்து விட்டனர்.
அதேசமயம், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், பிரிட்டன் நாட்டு சட்டத்தின்படி ஒரு விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கையொப்பமிட்டால் அதை பாராளுமன்றம் பரிசீலனை செய்யலாம் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ என்பவர் பிரிட்டன் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் மூலமாக கையெழுத்து வேட்டை நடத்தினார்.
'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது மக்களின் முடிவு என்று பிரிட்டன் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நாம் நிரூபித்தாக வேண்டும்.
எனவே, அனைவரும் தவறாமல் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’ என பிரிட்டன் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவை பயன்படுத்தி ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பை தவிடுப்பொடியாக்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ குறிப்பிட்டிருந்தார்.
இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பெருவாரியாக வாக்களித்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் நேற்றிரவு திடீரென்று முடங்கியது.
இன்றைய நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக விரைவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் அருகேயுள்ள தடுப்பு வேலி அருகே படுவேகமாக வந்த கார் மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். #BritishParliament #BritishParliamentCarcrash
லண்டன்:
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் வாசல் அருகேயுள்ள சாலையில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிக்னலுக்காக சில வாகனங்கள் நின்றிருந்தன.
அப்போது, அந்த சாலையில் தவறான பாதையில் படுவேகமாக சீறிவந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி குலுங்கும் அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்த கார், பாராளுமன்ற வாசலில் உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி நின்றது.
அந்த காரை ஓட்டிவந்த நபரை உடனடியாக கைது செய்த போலீசார், கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.
இந்த விபத்தில் சாலையை கடப்பதற்காக சைக்கிளில் காத்திருந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது, காரை ஏற்றி மக்களை கொல்ல முயன்ற தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாராளுமன்ற சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்ட்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. விக்டோரியா டவர் கார்டன்ஸ், மில்பேங்க் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. #BritishParliament #BritishParliamentCarcrash
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் வாசல் அருகேயுள்ள சாலையில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிக்னலுக்காக சில வாகனங்கள் நின்றிருந்தன.
அப்போது, அந்த சாலையில் தவறான பாதையில் படுவேகமாக சீறிவந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி குலுங்கும் அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்த கார், பாராளுமன்ற வாசலில் உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி நின்றது.
அந்த காரை ஓட்டிவந்த நபரை உடனடியாக கைது செய்த போலீசார், கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது, காரை ஏற்றி மக்களை கொல்ல முயன்ற தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாராளுமன்ற சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்ட்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. விக்டோரியா டவர் கார்டன்ஸ், மில்பேங்க் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. #BritishParliament #BritishParliamentCarcrash
பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது. #TrumpBabyballoon #LondonantiTrumpprotests
லண்டன்:
லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை முன்னர் கடுமையாக விமர்சித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிரிட்டன் வருகைக்கு சில மாதங்களாகவே எதிர்ப்பு கிளம்பியது.
வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் விதிப்பு உள்ளிட்ட டிரம்ப் அரசின் கொள்கைகளால் பிரிட்டனில் வாழும் ஒருபிரிவினரிடம் அவருக்கு எதிரான மனப்போக்கு நிலவி வருகிறது.
சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசார இயக்கம் நடைபெற்று வருகின்றது. நேற்று பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க டிரம்ப் வந்தபோது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், டிரபல்கர் சதுக்கத்தில் திரண்டுள்ள பலர் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டன் நகரில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால் வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி லண்டன் புறநகர் பகுதியில் உள்ள தெரசா மே இல்லத்தில் நடைபெற்றது. இன்று விண்ட்ஸர் கேஸ்ட்டில் அரண்மனையில் எலிசபத் ராணியை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். ராணி அளிக்கும் விருந்திலும் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த டிரம்ப் எதிர்ப்பாளர்கள் இன்று லண்டன் நகரில் குவிந்துள்ளனர். இதற்கிடையில், டிரம்ப்பை நைய்யாண்டி செய்யும் விதத்தில் பாராளுமன்ற சதுக்கத்தில் ‘டிரம்ப் பேபி’ பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க விட்டனர்.
‘டிரம்ப் பேபி சிட்டர்ஸ்’ என்னும் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவரும், இந்திய வம்சாளியை சேர்ந்தவருமான ஷீலா மேனன் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை பிரிட்டன் நாட்டு அரசியல் நையாண்டியின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டார்.
உள்ளூர் நேரப்படி, இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஆரஞ்சு நிற பலூனை விண்ணில் பறக்கவிட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பிரிட்டன் நாட்டு பாராளுமன்றன் அருகே இந்த பலூன் பறக்க அனுமதி அளித்தது தொடர்பாக கருத்து கூறிய லண்டன் நகர மேயர் சாதிக் கான், ‘டிரம்ப்புக்கு எதிரான இந்த போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் அல்ல, சிறப்பான உறவுமுறைகளை பேணிவரும் நாடு என்ற முறையில் எங்கள் நாடு மதிக்கப்பட வேண்டும். அந்த நன்மதிப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இதுபோன்ற போராட்டங்களை தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாது’ என குறிப்பிட்டார். #TrumpBabyballoon #LondonantiTrumpprotests
×

X